வவுனியாவில் காணாமல்போன மாணவன்சடலமாக மீட்பு


நேற்றைய தினம் வவுனியா வடக்கு கனகராஜன்குளம் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் காணாமல் போயுள்ளசந்தர்ப்பத்தில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை முதல் காணாமல் போயுள்ளபாலசுப்பிரமணியம் தர்மிலன்  பல்வேறு தேடுதலின் பின்னர் இன்று முற்பகல் குறித்த  காட்டிற்குள் மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்றுக்காட்டிற்குள் தடிவெட்ட சென்ற இளைஞனைகாணாத நிலையில் அப்பகுதி பொலிசார் மற்றும் இளைஞர்கள் தேடுதலை மேற்கொண்ட இந்நிலையில், இன்று காலை மீண்டும் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

அச்சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞன் கிரவல் வெட்டப்பட்டு தண்ணீர் தேங்கிய பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆரம்பக்கட்ட விசாரணையில்தண்ணீர் தேங்கிய பகுதியில் விழுந்ததால்  உயிரிழந்திருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சடலம் மருத்துவ சோதனைக்காக வைத்திசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் கனகராஜன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *