வாழ்வில் வளம் பெற சில ஆன்மீக ரகசியங்கள்…


ஏதேனும் ஒரு முக்கியமான வேலையாக அல்லது தொலைதூர வெளியூர் பயணம் கிளம்பினாலும் காராமணிப் பயிர் கொஞ்சம் வலது கையில் வைத்து வாசலுக்கு அருகில் நின்று கொண்டு விநாயகரை வேண்டிஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சர்வ விக்ன வினாசாய, சர்வ கார்ய சித்திம் நமஹ ||
என்ற மந்திரத்தை 7 தடவை ஜெபித்து அந்தக் காராமணிப் பயிரில் ஊதி பின்னர் வாசலைத் தாண்டி வெளியே வந்து காராமணிப் பயிரை எறிந்து விடவும்.பின்னர் விநாயகரை வேண்டி செல்ல காரியத்தடைகள் நீங்கி வெற்றியுண்டாகும்.ஒரு குறிப்பிட்ட நல்ல காரியம் செய்யும் போது பலரின் எதிர்ப்பு,பொறாமை,திருஷ்டி இருந்தால் அந்த மாதிரி நேரங்களில் இந்தப் பிரயோகத்தை உபயோகிக்க நிச்சயம் வெற்றி கிட்டும்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சூர்ய உதயத்திற்கு முன் குளித்து வெண்ணிற ஆடை அணிந்து சூரியனைப் பார்த்தபடியே ஹ்ரீம் என்று 108 தடவை ஜெபிக்கவேண்டும்.ஜெபத்திற்கு மாலைகள் அவசியம் இல்லை.பயன்படுத்த வேண்டும் என்றால் ஸ்படிகம் அல்லது ருத்ராக்ஷ மாலை பயன்படுத்தவும்.
ஜெபித்து முடித்த பின் வெண்சந்தனப் பொடி அல்லது வெண்சந்தனக் கட்டையை அரைத்து ஹ்ரீம் என்று 11 தடவை ஜெபித்து நெற்றில் அணிந்து கொள்ளவும்.பின் மற்ற நாட்களில் ஹ்ரீம் என்று 11 தடவை ஜெபித்து நெற்றில் வெண்சந்தனம் அணிந்து வரவும்.இதை எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் செய்து வர செல்வம், புகழ் இவற்றில் படிப்படியாக உயர்ந்த அந்தஸ்தை அடையலாம் எனத் தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர் ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.

ஒரு பௌர்ணமி அன்று நல்ல தேங்காய் ஒன்றை எடுத்துக் கொண்டு சிறிது குங்குமத்தைப் பன்னீரால் கரைத்து அதை வலது கை மோதிர விரலால் தொட்டு தேங்காயில் ஸ்வஸ்திக் வரையவும்.பின்னர் அந்தத் தேங்காயின் மேல் ஒரு சிகப்புத்துணியைச் சுற்றவும்.பின்னர் அதைக் கொண்டு வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தையும் வீட்டில் உள்ளவர்களையும் (தலையையும்) சுற்றவும்.முடித்தபின் ஆறு அல்லது கடலுக்குச் சென்று செருப்பைக் களற்றிவிட்டு வெறும் காலுடன் ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்று 11 தடவை ஜெபித்து மஹாவிஷ்ணுவிடம் இல்லத்தில் துரதிர்ஷ்டம்,துன்பங்கள் நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாக அருள் செய்ய வேண்டிக் கொண்டு அந்தத் தேங்காயை நீரில் போட்டு விடவும். இதன் மூலம் வீட்டில் வளமும்,நலமும்,மகிழ்ச்சியும் உண்டாகும்.

செவ்வாய்க்கிழமை அன்று குறைந்தது 1/2 மீட்டர் அல்லது 1 மீட்டர் நீளமுள்ள சிகப்புத் துணி வாங்கி அதில் முடிந்த அளவு கோதுமை வைத்து கொஞ்சம் பணமும் வைத்து முடிந்து கொள்ளவும்.சூரிய அஸ்தமன வேளையில் ஹனுமான் ஆலயம் சென்று அந்த சிகப்பு மூட்டையை (முடியை) ஹனுமான் பாதத்தில் வைத்து சர்வ கிரக தோஷங்களும் நிவாரணமாகக் கீழ்க்கண்ட மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.அல்லது அர்ச்சகரிடம் கொடுத்துப் பாதத்தில் வைத்து அர்ச்சித்துத் தரச் சொல்லி வாங்கிக் கொண்டு கீழே உள்ள மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.பின்னர் அந்தச் சிகப்பு முடியை அர்ச்சகருக்கு தட்சிணையாக கொடுத்து விடவும்.அல்லது யாரேனும் உணவுப் பொருட்கள் தேவைப்படும் யாசகர்களுக்குத் தானமாக வழங்கவும்.இதன் மூலம் கிரக தோஷப் பாதிப்புகள் நீங்கும் எனத் தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *