விடுதலைப்புலிகளின் தங்கம் தோண்டியவர்கள் கைது!


இறுதி யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் இருந்த புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் உள்ள லோரன்ஸ் ராஜா என்பவரது காணியில் விடுதைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக தெரிவித்து வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் இணைந்து அகழ்வில் ஈடுபடுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் குறித்த வீட்டின் பின்புறமாக உள்ள காட்டில் இருந்து கடந்த 7 நாட்களாக இவர்களது நடவடிக்கைகளை அவதானித்து இன்று குறித்த இடத்தை தோண்டும் நடவடிக்கை இடம்பெறும் போது குறித்த 7 பெயரும் கைது செய்யப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் புதைத்த நகைகள் ஒரு பெட்டியில் இந்த இடத்தில் இருப்பதாக தெரிவித்தே அகழ்வில் ஈடுபட்டதாக குறித்த நபர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர்கள் மாத்தறை, சிலாபம், மன்னார் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்தவர்கள் எனவும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூன்று இனத்தவர்களும் உள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

(முல்லைத்தீவு நிருபர் தவசீலன்)Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *