விராட் கோஹ்லி ஒரு ஓட்ட இயந்திரம்!


இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி ஒரு மனிதரே அல்ல, அவர் ஒரு ஓட்ட இயந்திரம் என மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இத்தொடரில் சாதிக்கப் போகும் அணி, வீரர்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறிய கருத்துக்கள் இவை,

“உலக கிண்ணத்தை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அந்த அணியின் தலைவர் விராட் கோஹ்லி மனிதரே அல்ல. அவர் ஒரு ஓட்ட இயந்திரம். கோஹ்லி ஓட்டங்கள் குவிக்க ஆரம்பித்துவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். அவரது துடுப்பாட்ட திறன் 80 மற்றும் 90 ஆண்டுகளில் விளையாடிய வீரர்களை நினைவுப்படுத்துகிறது.

என்னை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் என்றுமே மிகச்சிறந்த வீரர். அவருடன் கோஹ்லியை ஒப்பிட முடியாது. ஆனால் கோஹ்லியிடம் சிறப்பான திறமைகள் பல உள்ளன. இளம் வீரர்களுக்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பார். என கூறினார்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *