வீரகேசரி


வீரகேசரி

ஆசிரியரின் பேனாவிலிருந்து..

போலி முகவர்களால் கடத்தப்படும் இலங்கையர் அனுபவிக்கும் சொல்லெனாத்துன்பங்கள் பல்வேறு வகையில் வெளிவரத் தொடங்கியூள்ளன. மத்திய கிழக்கிற்கு வேலை வாங்கித்தருவதாகக் கூறிக் கடத்தப்படும் இளம் பெண்களின் நிலை மிகக் கவலையளித்துக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன் தொடங்கிய அவூஸ்திரேலியாவிற்கான ஆட்கடத்தல்அனைத்துத் தடைகளையூம் மீறி நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது புதிதாக பராயமடையாதவர்களைக் கடத்தும் முயற்சிகளும் நடைபெறுவதாகத் தெரிகின்றது.

இவற்றைத் தடுக்க அரசு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க முன்வருமா?

தெரிவூக்குழுவில் மு.காவைத் தூக்கியெறிந்தது அரசு

அரசியல் அமைப்புத் திருத்தம் தொடHபான விசேட நாடாளுமன்றத் தெரிவூக்குழு ஒன்றை அமைக்கும் முயற்சியிலுள்ள  அரசு அதற்காக முன்மொழிந்த 19 அங்கத்தவர்களில் முஸ்லிம்காங்கிரஸ் அங்கத்தவர்கள் எவரையூம் உள்ளடக்கவில்லை. அரச பங்காளிக் கட்சிகளின் அங்கத்தவர்களைக் கொண்டு உருவாக்கப்பட் உத்தேசிக்கப்பட்டுள்ள இக் குழுவிற்கு அரச பங்காளிக்கட்சியான மு.கா சேHக்க்படாததையிட்டு அதன் தலைவர் கடும் கடுப்பிலுள்ளார். மு.கா இல்லாத தெரிவூக்குழு குப்பையில் போடப்பட வேண்டியது எனத் தெரிவித்த அவர்இ சனனாயகத்தைப்படுகுழியில் வீழத்தும் முடிவூ இது எனத் தெரிவித்துள்ளார்.

உலகப் பிரசித்தம் பெற்ற கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் விகாரைக்குக் காணி

சுமாH ஒரு ஏக்கர் காணியை விகாரை அமைப்பதற்காக கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் அரசு வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இக் காணியை வில்கம் ரஜமகா விகாரையின் பிரதமகுருவிற்கு அரசு வழங்கியூள்ளது.

புதிய தொழில்நுட்பப் பாட கல்வியைக் கற்பிக்கத் தெரிவான பாடசாலைகளுள் கிழக்கு மாகாண தமிழ்ப் பாடசாலைகள் புறக்கணிப்பு

உயர் தரப்பிரிவில் புதிதாக அறிமுகம் செய்யப்படவூள்ள தொழில்நுட்பப் பாடப் பிரிவினை கற்பிப்பதற்காக நாடளாவிய ரீதியில் தெரிவூசெய்யப்பட்டுள்ள பாடசாலைகளுள் கிழக்கு மாகாணதமிழ்ப்ப பாடசாலைகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியூள்ளது. விஞ்ஞானஇ கணிதஇ கலைஇ வHத்தகப் பிரிவூகளுக்குமேலதிகமாக தொழில் வாய்ப்பைப் பெற்றுத் தரக்கூடிய பாடநெறியான தொழில்நுட்ப்ப பாடநெறியை கற்பிப்பதற்காக தெரிவூ செய்யப்பட்டுள்ள பாடசாலைகளில் திருகோணமலையில்மட்டுமே ஒரு பாடசாலை தெரிவாகியூள்ளது. கிழக்கு மாகாணத்தில் எட்டு முஸ்லிம் பாடசாலைகளும்இ மூன்று சிங்களப் பாடசாலைகளும் ஒரேயொரு தமிழ்ப் பாடசாலையூமேதெரிவாகியூள்ளன.

வடமாகாண சபைத் தேர்தல் – சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேர்முகத் தேர்வூ

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவூள்ள வேட்பாளர்களைத் தேர்வூ செய்யூம் நேHமுகத் தேர்வூ சனிக்கிழமை நடந்துள்ளது. யாழ்ப்பாணம்இமுல்லலைத்தீவூஇ மன்னார் மாவட்டங்களிலிருந்து விண்ணப்பித்திருந்த 50பேH நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியூள்ளனர்.

13 தி இல்லாமற் போனால் இந்தியாவிற்குப் பெருத்த அவமானம்

13வது திருத்தச் சட்டத்தை இல்லாதொழித்தால் இந்தியாவிற்குப் பெருத்த அவமானமாகப் போய்விடும் என பா.ம.கட்சியினH தெரிவிவத்துள்ளனH. அக்கடசியின் தலைவH ஜி.கே.மணிதெரிவித்தபோது 13 தி யை இல்லாதொழிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை இந்தியா தடுத்து நிறுத்தத் தவறினாலு அது இந்தியாவிற்குப் பெருத்த அவமானமாகப் போய்விடும் எனத்தெரிவித்ததுடன் இலங்கைத் தமிழருக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாH.

புலி ஆதரவாளர் மைதானத்துள் – விளக்கம் கேட்கிறது இலங்கை

மினி உலக்க கோப்பைப் போட்டிகளின் போது அரையிறுதிப் போட்டிகளில் இந்திய இலங்கை அளிகள் மோதிய போட்டியின் போது புலி ஆதரவாளர்கள் இடைய+று வினைவித்தமையைத்தடுக்க முடியாமற் போனதற்கான காரணத்தை விளக்குமாறு இலங்கை இங்கிலாந்து அரசைக் கேட்டுள்ளது. இங்கிலாந்தின் வெளிவிவகார அமைச்சிடமே இவ்விளக்கம் கோரப்பட்டுள்ளதாகஇலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *