2.0 க்காக 3000 இணையத்தளங்களை முடக்கிய சென்னை உயர்நீதிமன்றம்


ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள 2.0 படத்தை திருட்டுத்தனமாக இணையத்தளங்களில் பதிவிடுவதை தடுக்கும் வகையில், 3000 இணையத்தளங்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு படம் வெளியாவதற்கும் முன்னரே திருட்டுத்தனமாக இணையத்தளங்களில் வெளியாகி வருவது வழக்கமாகி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் என்னதான் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்தாலும், வெளியாவது வெளியாகத்தான் செய்கிறது.

இதற்கு முன்னதாக வெளியான தளபதியின் சர்கார் படம் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானது. இந்த நிலையில், ரூ.543 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட 2.0 படத்தை இணையத்தில் வெளியாவதை தடுக்கும் வகையில் லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

படம் இணையத்தில் வெளியானால், பெரியளவில் நஷ்டம் ஏற்படும் வகையில், இந்த மனு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனு மீதான விசாரணையின் மூலம், கிட்டத்தட்ட, 3000 இணையத்தளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eight =