பாகுபலியின் சாதனையை முறியடித்த 2.0


ரஜினிகாந்த், அக்ஷ்ய்குமார் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியான இந்திய படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற ஷங்கர் மீண்டும் இப்படத்தின் மூலம் தனது பெயரை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்னர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் உலகளவில் 9 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான நிலையில், 2.0 திரைப்படம் 10,500 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்துள்ளது.

உலகின் அதிக திரையரங்குகளில் வெளியான முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை 2.0 பெற்றுள்ளது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 19 =