வசூலுக்கு அத்திவாரம் போடும் ரஜினியின் 2.0


ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் வரும் 29ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், திரையரங்குகளின் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது.

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எந்திரன்’ மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. ஷங்கர் இயக்கும் இப்படத்தில் ரஜனிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் வருகின்ற 29ம் திகதி வெளியிடப்படவுள்ளது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *