அச்சடிக்கப்படாத புத்தகம்!


Voynich manuscript என்னும் புத்தகத்தைப் பற்றி கேள்விப் பட்டிருக்கின்றீர்களா? இன்னும் அச்சடிக்கப்படாத இந்தப்புத்தகம் யாராலும் விளக்கம் சொல்ல முடியாத வரி வடிவங்களாலும் படங்களாலும் கையால் எழுதப்பட்டுள்ளது.இது எப்போது யாரால் எழுதப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

கதிரியக்க கார்பன் தேதியாக்க முறைமூலமாக இது எழுதப்பட்ட காலம் 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அறியப்பட்டுள்ளது. இத்தாலி மறுமலர்ச்சி காலத்தில் வடக்கு இத்தாலியில் எழுதப்பட்ட இந்தப்புத்தகத்தை 1912 ம் ஆண்டு Voynich  என்ற பதிப்பாளர் வாங்கினார்.

காணமால் போன அல்லது தவறிப் போன பக்கங்களைத் தவிர 240 பக்கங்கள் இந்தக் கைப்பிரதியில் மீதம் இருக்கின்றது.

இதில் உள்ள எழுத்துக்கள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டு உள்ளது. பெரும்பான்மையான பக்கங்களில் ஏதாவது ஒன்றை விளக்கும் வகையில் படங்கள் இருக்கின்றன.

2013 ம் ஆண்டு மான்செஸ்டர் பலகலைக் கழகத்தைச் சேர்ந்த சொற்பொருள் ஆய்வாளர்கள் இதை பேப்பரில் பதிப்பித்தும் இதிலிருக்கும் எழுத்துகள் ஏதோ ஒன்றை சங்கேதக் குறியில் குறிப்பிடுவதாகக் கூறுகின்றார்கள். இதிலிருக்கும் எழுத்துகள் எந்த அர்த்ததையும் சொல்லவில்லை என்பது ஒரு சிலரின் கருத்து.

 

நன்றி : 365 துணுக்ஸ் | தினம் ஒரு தகவல்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *