கோவிலில் அங்க பிரதட்சிணம் இடமிருந்து வலமாக ஏன் செய்ய வேண்டும்?


பொதுவாக கோவிலில் வலம் வரும்போதும் சரி, பிரதட்சிணம் செய்வதனாலும் சரி, இடமிருந்து வலமாகத்தான் வர வேண்டும். இவ்வாறு பிரதட்சிணம் செய்து வணங்குவது என்பது இயற்கையோடு இணைந்தது. நாம் வாழுகின்ற பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் போதும் சரி நீள்வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வரும் போதும் சரி இடமிருந்து வலமாகவே சுற்றுகிறது. இயற்கையின் இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் நாமும் இடமிருந்து வலமாக சுற்றி வந்து தெய்வங்களை வணங்குகிறோம். நம் வாழ்க்கை சக்கரம் சுழல்வதற்கு கடவுள் என்ற ஒரு புள்ளி வேண்டும்.

அதை மையமாக வைத்தே நம் வாழ்க்கை இயங்குகிறது. நம் தினசரி செயலின் ஆதாரமும், பணிகளின் மையமும் தெய்வமே என்பதை உணர்த்தத்தான், கடவுளை மையமாக வைத்து நாம் ஆலயங்களில் சந்நிதியை சுற்றி வருகிறோம். எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும், இந்த பூமியில் வசிப்பவர்கள் இடமிருந்து வலமாகத்தான் சுற்றி வணங்க வேண்டுமே தவிர, வலமிருந்து இடமாக சுற்றி வணங்குதல் என்பது தவறு மட்டுமல்ல, இயற்கை நியதிகளுக்கும் மாறானது.

 

நன்றி : தினகரன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *