கிளிநொச்சியில் கோர விபத்து இருவர் பலி


தென்னிலங்கையிலிருந்து யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த எரிபொருள்தாங்கியும், பரந்தனிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த உந்துருளியும் விபத்துக்குள்ளாகியதில், உந்துருளியில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை 7.20 மணியளவில், கிளிநொச்சி எ9 வீதியில் நடைபெற்ற இந்த விபத்தின் போது ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன், மற்றொருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பொழுது உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலியான ஒருவர் கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த செல்வராஜா கஜீபன் வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − three =