கிளிநொச்சியில் கோர விபத்து மூவர் பலி


கிளிநொச்சி – பளை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இராணுவ ட்ரக் ரக வாகனமொன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் உயிரிழந்தவர்கள் மூவரும் ஆண்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மூவரின் சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *