துருக்கிய இராணுவ ஹெலிகொப்டர் விபத்து – நால்வர் பலி


தலைநகர் இஸ்தான்புல்லின் மத்திய பகுதியில் துருக்கிய இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில், வீரர்கள் நால்வர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சமந்திரா விமான நிலையத்தில் விமானங்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த குறித்த ஹெலிகொப்டர், இன்று காலை சன்கெக்டேப் நகரில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

UH-1 ரக இராணுவ ஹெலிகொப்டர், இரண்டு தொடர்மாடிக் குடியிருப்புகளுக்கு இடையில் வீழ்ந்துள்ளதோடு, வீதி முழுவதும் விமானத்தின் சிதைவுகள் சிதறியுள்ளதாகவும் கூறப்படுகின்றன.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *