யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்து விபத்து நால்வர் பாலி, பலர் படுகாயம்!


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்து ஒன்று நாத்தாண்டிய,ஹெமில்டன் கால்வாயில் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் மூவர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மாறவில மற்றும் நாத்தாண்டிய வைத்தியசாலைகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *