ஆதரவற்றோருக்காக முதியோர் இல்லம் கட்டும் நடிகை ஹன்சிகா


நடிகை ஹன்சிகாவிற்கு தற்போது தமிழில் போதிய மார்க்கெட் இல்லை. இருந்தாலும் தற்போது மூன்று படங்களில் நடித்து வருகின்றார். விக்ரம் பிரபுவுடன் ‘துப்பாக்கி முனை’, அதர்வாவுடன் ‘100’ ஆகிய படங்களில் நடிக்கிறார். ஹன்சிகாவின் 50 ஆவது படம்  ‘மஹா’ என்ற பெயரில் தயாராகிறது.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா அளித்த பேட்டி ஒன்றில், “நான் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றேன். ‘மஹா’ படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம். அத்துடன் கதை பிடித்ததால் நடிக்க சம்மதிக்கிறேன். வணிகப் படங்களில் அதிகம் நடித்திருக்கிறேன். மற்ற மொழிப்  படங்களை விட தமிழ்ப்படங்களில் நடிப்பது மிகவும் பிடித்திருக்கிறது.
‘மான் கராத்தே’ படத்தில் நடிப்பதற்காக 3 கதைகளை நிராகரித்தேன். எனது படத்தில் யார் கதாநாயகனாக நடிக்கிறார்கள்? எனது கதாபாத்திரம் எப்படி இருக்கிறது? என்றெல்லாம் பார்ப்பது இல்லை. அந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்றுதான் யோசிப்பேன். ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்த நாளில் ஒரு ஆதரவற்ற குழந்தையை தத்தெடுப்பது வழக்கமாக வைத்திருக்கிறேன்.
மேலும் ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லம் ஒன்றை மும்பையில் கட்டுவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறேன். இதற்காக நான் வரைந்துள்ள ஓவியங்களை கண்காட்சியாக வைத்து நிதி திரட்ட திட்டமிட்டுள்ளேன் எனக்குறிப்பிடுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *