சிம்பு உரையில் கர்நாடக மக்கள் மாற்றம்!


கடந்த தினத்தில் சிம்பு காவிரி பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தார். இந்த ஊடக சந்திப்பில் சிம்பு மேற்கொண்ட உரையை தொடர்ந்து கர்நாடக மக்கள் இடையே சிம்புக்கு ஆதரவு பெருகி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்து தமிழ் திரையுலகினர் மௌன போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் , ரஜினி , கமல் , விஜய் , சூர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

எனினும் ,சிம்பு இதில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையிலேயே சிம்பு இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். தங்களின் தேவைகளை அரசிடம் கூறி பெற முடியாதபோது மக்களுக்காக அவர்கள் போராடுவதில் பயன் இல்லை என்று நடிகர் சிம்பு உணர்பூர்வமாகவும் உணர்ச்சிகரமாகவும் பேசியதை பல அரசியல் பிரமுகர்கள் கிண்டலடித்து வந்தனர்.

இதில் முக்கியமாக டேக் யை உருவாக்கி கர்நாடக மக்கள் தண்ணீர் தர விரும்பினால் இந்த டேக் யை பயன்படுத்தி ஒரு டம்லர் தண்ணீர் கொடுத்து தங்களது ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில், நேற்று 3 மணியிலிருந்து 6 மணிக்குள் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டிருந்தார். பெரிய ஆச்சரியம் என்னவென்றால் கர்நாடக மக்கள் இந்த டெக் யை பயன்படுத்தி தங்களது ஆதரவை பலர் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

சிம்பு காவிரி பிரச்சினையை அரசியல்வாதிகள் அல்லாமல் இரு மாநில மக்களும் சமாதானமாக பேசி தீர்க்க வேண்டும் என்று ஒரு ஆலோசனை வழங்கினார். அரசியல்வாதிகளை ஓரங்கட்டிவிட்டு மக்களே சமாதானமாக பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற சிம்புவின் ஆலோசனைக்கு கர்நாடகாவில் ஆதரவு கிடைத்துள்ளது.

சிம்பு என்ன அருமையான யோசனை தெரிவித்துள்ளார். எங்களுக்கு வன்முறை அரசியல் பிடிக்கவில்லை. சிம்புவை எங்களுக்கு பிடித்துவிட்டது. இனி அவர் படங்கள் இங்கு வௌியானால் அமோக வரவேற்பு கொடுப்போம் என்றும் கர்நாடக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து சிம்பு அரை மணிநேரமாக பேசிய காணொளியை கர்நாடக மக்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

 

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *