நடிகர் விஜய் தூத்துக்குடியில்!


 

மிகவும் எளிமையாக வந்து எங்களது கஷ்டத்திலும், வேதனையிலும் பங்கெடுத்து போய்விட்டார் இந்த மகன் என்று நடிகர் விஜய்யின் வருகை குறித்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான உறவினர்கள் தெரிவித்திருக்கிறார்.

கடந்த மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுற்றுவட்டார கிராம மக்கள் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி வன்முறையில் முடிந்தது. இதில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் அரசியல் தலைவர்கள் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், நடிகர் விஜய் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார்.

மதுரையிலிருந்து கார் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த நடிகர் விஜய் அதிகாலை 1.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில், துப்பாக்கிச் சூட்டில் பலியான கிளாட்சன், ஜான்சி, ஸ்னோலின் ஆகியோரது வீடுகளுக்கு சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு சந்திந்தார்.

எல்லோரும் ஸ்னோலினின் மறைவு குறித்து வேதனையுடன் விட்டிற்கு வெளியே அமர்திருந்தோம். அப்போது இரண்டு பைக்குகள் வந்தன. யாரென்று பார்த்தப்போது விஜய் வந்து கொண்டிருந்தார். வீட்டினுள் வந்த விஜய் எங்களுடன் அமைர்திருந்து எங்களது அனுதாபத்தில் பங்கெடுத்தார். மிகவும் வேதனைப்பட்டார்.

தாமதமாக வந்ததற்கு வருத்தம் தெரிவித்தார். தொந்தரவு செய்திருந்தால் எங்களை தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறினார். மிகவும் எளிமையாக வந்து எங்களது கஷ்டத்திலும், வேதனையில் பங்கெடுத்து போய்விட்டார் இந்த மகன்” என்று கூறினார்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 1 =