பிரபல நடிகை நயன்தாரா CBI யில்


 

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வௌியான அனைத்து படங்களுமே அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக இருந்தன.

தற்போது ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் துணிச்சலான CBI அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த கதாபாத்திரத்திற்காக தலைமுடியைக் குறைக்க சம்மதித்தாராம்.

அவரது CBI அதிகாரி தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி கௌரவ தோற்றத்தில் வருகிறார். அவரது தம்பியாக அதர்வா நடித்துள்ளார். இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார்.

இந்தப் படமும் நயன்தாராவின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்கின்றனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − six =