நடிகை ஸ்ரீதேவிக்கு பல்லாயிரம் ரசிகர்கள் இறுதி அஞ்சலி 


இன்று  நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் பல்லாயிரம்  உறவினர்கள் நண்பர்கள் மற்றும்  ரசிகர்களின் கண்ணீருடன் நடைபெற்றது.

தமிழ் திரைப்படங்கள் மூலம் அறிமுகமாகி இந்தியில் பிரபல்யமான நடிகையாக வலம்வந்த  நடிகை ஸ்ரீதேவியின் மரணம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்றைய தினம் பிரித்தானியாவின் அனைத்து முன்னணி ஊடகங்களும்  நடிகை ஸ்ரீதேவியின் இறுதி நிகழ்வினை செய்தியாக வெளியிட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை உறவினரின் திருமண நிகழ்வுக்கு துபாய் சென்றபோது இருதய செயலிழப்பு காரணமாக இறந்துள்ளார் என அறிவித்த போதும் பின்னர் ஹோட்டலின் குளியலறையில் இடம்பெற்ற விபத்துக்காரனமாகவே இறந்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *