“அந்த மூனு பேரை நம்பித்தான் நான் அப்படி நடித்தேன்”


ஆடை’… ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்ததில் இருந்தே அதிர்வலைகளை ஏற்படுத்திய திரைப்படம், விரைவில் வெளிவர இருக்கிறது.

இப்படத்தில் கதையின் முக்கியத்துவம் கருதி அமலா பால், நிர்வாணமாக நடித்திருந்தார். அந்த அனுபவம் குறித்து முதல் முறையாக ‘ஆடை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையாகப் பேசினார் அமலா.

“முதலில் கதையைப் படித்து, கேட்டு ஒரு ஆர்வத்தில், ஒரு தைரியத்தில் ஒத்துக்கொண்டேன். ஆனா அந்தத் தருணம் நெருங்க நெருங்கதானே சீரியஸ்னஸ் தெரியும்? அந்த நேக்கட் ஸீன் ஷூட் பண்ற நாள் வந்தது.

நான் கேரவன்ல இருந்தேன். என் மேனேஜர் கிட்ட கேட்டேன், செட்ல எத்தனை பேர் இருப்பாங்க, செக்யூரிட்டி எப்படி இருக்கும் என்றெல்லாம்.

ஒரு மாதிரி ஸ்ட்ரெஸ்ஸா ப்ரெஷரா இருந்தது. செட்குள்ள போனேன். உள்ள பௌன்சர்செல்லாம் இருந்தாங்க.

வர்றவங்க எல்லார்கிட்டயும் ஃபோனை வாங்கி வச்சுட்டாங்க. ஏர்போர்ட் அளவுக்கு செக்யூரிட்டி பலமா இருந்தது.

லைட் மேன் அண்ணா, செட் அஸிஸ்டண்ட்ஸ் எல்லாருக்கும் அன்னைக்கு ரெஸ்ட் கொடுத்துட்டாங்க. செட்ல பதினைந்து பேர்தான் இருந்தாங்க.

முதல் ஸீன் நடிச்சு முடிச்சுட்டு நான் போய் அவங்ககிட்ட, “பாஞ்சாலிக்கு அஞ்சு கணவர்கள்தான். நான் இப்போ என்னை ‘பந்த்ராலி’ (பதினஞ்சு கணவர்கள் உள்ளவள்) போல உணர்கிறேன்.

அந்த அளவு நம்பிக்கை வச்சாதான் அப்படி அங்க நடிக்க முடியும். அந்த அளவுக்கு அந்த டீம் எனக்கு கம்ஃபர்ட் கொடுத்தாங்க.

டைரக்டர் ரத்னா, தயாரிப்பாளர் சுப்பு, கேமராமேன் விஜய் கார்த்திக் இவுங்க மூனு பேர் மேல நான் வச்ச நம்பிக்கை, இன்னைக்கு நல்ல படமாக வந்திருக்கு. இவங்கள நம்புனதுதான் சமீபத்தில் நான் எடுத்த மிக நல்ல முடிவு”

இப்படி மிக நெகிழ்ந்து பேசினார் அமலா பால்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *