விந்தை உலகம் | மகளை இளவரசி ஆக்கிய தந்தை


அமெரிக்காவில் உள்ள வர்ஜினியா மாநிலத்தில் ஜெரமையா ஹீட்டன் என்பவர் வசித்து வருகிறார். அவரது மகளுக்கு இளவரசி கதைகள் மிகப் பிடிக்கும். ஒரு நாள் “நானும் இளவரசி ஆக முடியுமா அப்பா?” எனத் தந்தையிடம் கேட்டார்.
1405408969-2112அதை ரொம்ப சீரியசாக யோசித்துப் பார்த்த ஜெரெமையா, இணையத்தில் தேடியதில் எகிப்துக்கும் சூடானுக்கும் இடைப்பட்ட பகுதியில் பிர் தாவில் (Bir Tawil) எனும் பெயரில் சுமார் 800 சதுர கி.மீ. நிலம், இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடாமல் அனாதையாக இருப்பது தெரிய வந்தது.

மேப் வரைகையில், எல்லைப் பகுதி ஒப்பந்தங்கள் போடுகையில் இம்மாதிரி சில இடங்கள் விட்டுப் போவது உண்டு. இந்தியா – பாகிஸ்தான் இடையே இம்மாதிரி மேப் வரைகையில் விட்டு போன சியாச்சின் பகுதிக்கு இரு நாடுகளும் பின்னாளில் போரிட்டது வரலாறு. அதே போல் ஒப்பந்தம் போடுகையில் பிர் தாவிலும் விட்டுப் போய்விட்டது. புல்பூண்டு கூட முளைக்காத மலைப் பகுதி என்பதால் அங்கே மக்கள் யாரும் வசிக்கவில்லை.

1405408869-7079

உடனே எகிப்து விசா வாங்கி, கிளம்பிப் போய் பிர் தாவிலில் இறங்கி “அது எனக்கே சொந்தம்” எனச் சொல்லி, தன் உருவப் படம் பொறித்த கொடியையும் நாட்டிவிட்டு பிர் தாவில் பகுதிக்குத் தன் மகள் எமிலியை “இளவரசி எமிலி” ஆக அறிவித்தார் ஜெரெமையா.

சட்டப்படி அதற்கு உரிமை கொண்டாட, இனி ஐநா சபையை அவர் அணுகலாம். ஆனால் அம்மாதிரி சீரியசாகச் செய்யாமல் தன் முகநூல் கணக்கில் மட்டும் பீர் தாவில் படங்களைப் போட்டு தன் மகளை இளவரசியாக்கிய மகிழ்வில் இருக்கிறார் அந்தத் தந்தை.

 

 

நன்றி : செல்வன் | வெப் துனியாLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *