அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள்!


 1. உலகில் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதாக சொல்லிக்கொண்டே நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் முதல் பயங்கரவாத நாடு அமெரிக்கா.

மேலே உள்ள 5 அதிகளவில் ஆயுத விற்பனை செய்யும் நாடுகள் தான்,

ஐ. நா. சபையின் பாதுகாப்பு சபையில்

வீட்டோ (Veto) அதிகாரத்தோடு உள்ள நிரந்தர 5 உறுப்பு நாடுகள். விளங்குமா உலகம்?

அமெரிக்க இராணுவ புலனாய்வு அமைப்பு இயற்கையையும் விட்டுவைக்கவில்லை. மனிதர்களின் நண்பனான டால்பினையும் உளவு காரியங்களுக்குப் பயன்படுத்திகொள்கின்றனர்.

 1. அமெரிக்காவின் இராணுவ செலவுகள்:
 2. அமெரிக்காவின் ரகசிய உளவு விமானம். இது வானில் பல மாதங்கள் சுற்றி வந்து பல நாட்டு ரகசிய தகவல்களை சேகரித்தது யாருக்கும் தெரியாமல் அது பூமியில் இறங்கியதும் தான் தெரிய வந்தது.

இது தவிர ரகசிய செய்மதியையும் அனுப்பியுள்ளது.

 1. உலகம் தடை செய்துள்ள பொதுமக்களுக்கு அபாயகரமான கூட்டுக்குண்டுகளை (Cluster Bombs) அமெரிக்கா பயன்படுத்தி மக்களைக் கொல்வதோடு, பெருமளவில் ஏற்றுமதியும் செய்கிறது.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா, மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகள் வீசப்பட்டதை நாம் அறிவோம்.

உண்மையான காரணம் போரை முடிக்க அல்ல.

அணு குண்டுகளால் ஜப்பானுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் நாம் அறிவோம்.

1945 ம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி காலை 8.15 க்கு ஹிரோஷிமாவில் வீசிய அணுகுண்டால் உடனடி 90,000 மக்கள் கொல்லப்பட்டனர்.

ஆகஸ்ட் 9 ந்தேதி காலை 11.02 க்கு நாகசாகியில் வீசிய அணுகுண்டால் உடனடி 37,000 மக்கள் கொல்லப்பட்டனர். விரைவில் 2 நகரங்களிலும் இறந்தோர் எண்ணிக்கை 2,00,000 ஆனது. குற்றுயிருமாய், குலையுயிருமாய் அனுக்கதிர்வீச்சால் பல ஆண்டுகளுக்கு பாதிக்கப்பட்டவர்கள் பல்லாயிரம்.

ஜப்பான் நாடு போரை முடித்து சரணடைய தயாராக இருந்த நேரம். ஆனால்

அணுகுண்டுகள் ஜப்பானின் அப்பாவி மக்கள் மீது வீசப்பட்டு கொல்லப்பட்டனர். காரணம்:

 1. அமெரிக்காவால் தான் போர் முடிந்தது, ரஷ்யாவால் அல்ல என நிரூபிக்க.
 2. அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவ.
 3. அமெரிக்கா பற்றிய பயத்தை நாடுகளிடையே உண்டுபண்ணி சோவியத்தின் கம்யூனிசத்துக்கு எதிராக அணி திரட்ட.
 4. தான் தயாரித்து வைத்திருக்கும் அணு குண்டுகளை சோதிக்க.
 5. ஆயுத விற்பனையை அதிகரிக்க.

என்ன வகையான பரிசோதனைகள்:

 1. ஹிரோஷிமா மீது யூரேனியம் அணுகுண்டு வீசப்பட்டது. நாகசாகி மீது புளுடோனியம் அணுகுண்டு வீசப்பட்டு ஒவ்வொன்றின் பாதிப்புகளும் ஆய்வு செய்யப்பட்டது.
 2. ஹிரோஷிமா நகரத்தின் மீது 600 மீட்டர் உயரத்திலும், நாகசாகி நகரத்தின் மீது 500 மீட்டர் உயரத்திலும் வீசப்பட்டு அவைகள் ஏற்படுத்தும் பாதிப்புகளின் வித்தியாசம் பரிசோதிக்கப்பட்டது. காண்க:

 

அறிவியலில் மனித இனம் வளர்ந்ததாய் சொல்லப்படும் இன்றைய 21 ம் நூற்றாண்டிலும் பணம் பண்ணும் மிகப்பெரிய 13 தொழில்களாய் இருப்பவை:

 1. போதைப்பொருள் 2. இராணுவ தளவாட விற்பனை 3. விபச்சாரம் 4. பெட்ரோலிய உற்பத்தி
 2. போலியான பொருள் உற்பத்தி 6. விளையாட்டுத்துறை 7. சூதாட்டம் 8. வங்கித்தொழில் 9. மதுபான நிறுவனங்கள் 10. ஆபாச வலைதள வியாபாரம் 11. மருந்துத்துறை 12. திரைப்படங்கள் 13. ஆள்கடத்தல், உறுப்புகள் கடத்தல். காண்க:

மனிதகுல மேம்பாட்டை விடுத்து பணம் பண்ணும் குறிக்கோளே செல்வந்த நாடுகளின் முதலாளித்துவ குறிக்கோளாக இருக்கிறது.

செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் உந்து செல்ல ஒவ்வொரு கட்டத்திலும் நுணு நுணுக்கமாக திட்டமிடும் அறிவியல் உலகம் (காண்க காணொளி நிலநடுக்கத்தை தடுக்க முடியாவிட்டாலும் அது அடிக்கடி வரும் இந்தோனேசியா, நேபாளம் போன்ற நாடுகளிலாவது மக்கள் இழப்பை தடுக்கும் வகையில் நிலநடுக்கத்தை தாங்கும் கட்டட அமைப்புகளை உருவாக்கலாமே.

பூமியிலிருந்து ஏறக்குறைய 8 கோடி கி.மீ தூரத்திலுள்ள செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் விண்கலம் மைக்ரோ வினாடி சுத்தமாக அனுப்பும் தொழில் நுட்பம் படைத்த, 40 % ஏழையர் வாழும் இந்திய அறிவியல் உலகம்,

விபத்தினால் மனித உயிர்கள் அதிகம் இழக்கும் பேருந்துகளில், மகிழுந்துகளில் இருப்பதுபோல் காற்றுப்பை இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் ஒவ்வொரு இருக்கையிலும் பாதுகாப்பான கச்சை (Seat belt) வசதியாவது செய்தால் மனித உயிரிழப்பு பெருமளவு குறையுமே.

 

நன்றி : வேலாயுதம் ஆவுடையப்பன் | எழுத்து.காம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *