ஈழத்தமிழ் சிறுமியின் கண்ணில் தெரியுதடி கவிதை நூல் வெளியீடு


இலண்டனில் முதன்முதலாக ஈழத்தமிழ் சிறுமி  அனன்யா ரஜீந்திரகுமார் அவர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. புலம்பெயர்ந்து வாழும் பல்வேறு பிரமுகர்கள் அறிஞர்கள் கலந்து இவருக்கு வாழ்த்த இருக்கின்றார்கள்

பிரித்தானியாவின் வட பகுதி நகரான யோர்க்ஷாயார், ஹலீபாஸ் நகரில் வசித்துவரும் அனன்யா ரஜீந்திரகுமார் மிகவும் இளம்வயதில் பல்துறை ஆற்றல் கொண்டவராக விளங்குகின்றார். எட்டு வயதில் கவிதை, பேச்சு, பாடல், இசை மற்றும் கலைகள் என இவரது ஆற்றல் விரிந்துகொண்டு செல்கின்றது.

நான்காம் ஆண்டு கல்வி பயிலும்  அனன்யாவின் பெற்றோர்கள் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு பிரதேசத்தில் இருந்து பிரித்தானியா வந்து குடியேறியுள்ளனர். அவரது தந்தையான திரு ரஜீந்திரகுமார் அவர்களை வணக்கம் லண்டன் தொடர்புகொண்டு பேசியபோது, மிகவும் உற்சாகமாக நிகழ்வுக்கான ஒழுங்குகள் நடைபெறுவதாகவும், தமது மகளின் எட்டாவது வயதில் அவரது கவிதை நூல் வெளிவருவது மகிழ்வை தருவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் அனைவரையும் இந்த நிகழ்வுக்கு அன்புடன் அழைப்பதாகவும் தெரிவித்தார்.

வணக்கம் லண்டன் இணையமும் அனன்யா ரஜீந்திரகுமார் அவர்களுக்கு  வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது. இவரது பேணா இந்த பிரபஞ்சத்தின் எல்லாத்திசைகளுக்கும் பாயட்டும்.

வணக்கம் லண்டன் இணையம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *