கேரள கஞ்சாவுடன் 2 பெண்களும் ஒரு ஆணும் கைது!


 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து யாழ்பாணத்தில் இருந்து திருகோணமலையை வந்தடைந்த இரு பெண்கள் மற்றும் ஒரு ஆணிடம் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போதே 3 கிலோ 500 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை உப்புவெளி பொலிஸார் மிட்டுள்ளார்கள்.

குறித்த இரு பெண்களிடம் இருந்தே கேரள கஞ்சாவை கைப்பற்றிய போதும், தமக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அவர்கள் தெரிவித்ததகாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், யாழ்பானத்தில் வைத்து இருவர் இப் பொதிகளை தந்து விட்டதாகவும், திருகோணமலை அனுராதபுர சந்தியில் வருபவரிம் கொடுக்குமாறு தம்மிடம் கோரியதாகவும் குறித்த பெண்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் சந்தேக நபர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 11 =