ஒரு மாதத்தில் சுமார் 5000 சட்டவிரோத குடியேறிகள் மலேசியாவில் கைது


அண்மையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் வெவ்வேறு நாடுகளைச்சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தேடுதல் வேட்டையில் 68 வங்கதேசிகள், 36 இந்தோனேசியர்கள், 9 நேபாளிகள், 7 மியான்மாரிகள், பாகிஸ்தான், ஏமான், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தலா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த ஜனவரி மாதம் நடந்த தேடுதல்களில் சுமார் 5000 சட்டவிரோத குடியேறிகள் கைதாகியுள்ளனர். “கடந்த ஜனவரி 01 முதல் ஜனவரி 31 நடத்தப்பட்ட 1353 தேடுதல் வேட்டைகளில் 5091 சட்டவிரோத குடியேறிகளும் அவர்களுக்கு வேலை கொடுத்த 83 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என மலேசிய குடிவரவுத்துறையின் இயக்குனர் ஜெனரல் கைருல் டசைமீ டுட் தெரிவித்திருக்கிறார். இதில் பல இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சிக்கிய பலரிடம் ஆவணங்கள் கிடையாது, பலர் அனுமதித்த காலத்தை விட அதிகமாக தங்கியுள்ளனர். மேலும் பலர் போலி ஆவணங்கள் வைத்துள்ளனர்.

என இயக்குனர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார். பொது மக்கள் குறிப்பாக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோத குடியேறிகளை கொண்டு வருவதில் ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *