வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட கிராமங்களில் உதவி
( CANDLE AID LANKA ‘S ASSISTENCE )
வைகாசி மாதத்தில் ஏற்பட்ட திடீர் சூறாவெளி வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட பின்தங்கிய மீன்பிடி கிராமங்களான இலுப்பைக்கடவை, அந்தோனியார்புரம், கத்தாளம்பிட்டி போன்ற கிராமங்களில் மீன், இறால், நண்டு, கணவாய் போன்றவற்றை சிறு வலைகள் மூலமாக மீன் பிடித்து நாளாந்த ஜீவனோபாயம் செய்யும் மீனவர்கள் ஓர் சிலர் பாதிக்கப்பட்டனர்.
மேற்படி மீனவர்களுக்கு உதவிசெய்யும் நோக்கத்துடன் இலுப்பைக்கடவை பங்குத் தந்தை வணபிதா றஜனிகாந் அவர்கள் திரு. சிங்கிலேயர் பீற்றர் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தினை அணுகிய போது அவர் மொறட்டுவ கட்டில்ஏய்ட் (candle aid) ஸ்தாபனத்தில் உதவி பெற்று மூன்று லட்சம் ரூபாயில் (ரூபாய் 3,00,000) 10 குடும்பங்களுக்கு நண்டு வலை, இறால் வலை, மீன் வலை, கம்பு, ஈயம், மிதப்புக்கட்டை, தங்கூசி போன்றவற்றை கொள்வனவு செய்து ஆனிமாதம் 1ம், 2ம், கிழமைகளில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.
இதற்கு நிதி வழங்கிய Candle aid யனை ஸ்தாபனத்தின் திருமதி. டில் ஜெயவர்த்தனா, கப்ரின் எல்மோ ஜெயவர்த்தனா, திரு. மோகன் சமரசிங்க போன்றவர்களுக்கு ம.து.ம.ச தலைவரும், இலுப்பைக்கடவை பங்குத்தந்தையும், நன்றி கூறுகின்றனர்.
திரு. சிங்கிலேயர் பீற்றர்
இணைப்பாளர் Candle aid