ஆசியக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம்!இந்தோனேசியாவில் இடம்பெற்றுவருகிற ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2 வது நாளில் மல்யுத்தத்தில் இந்தியாவின் 5 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிற போட்டிகளில்
ஆண்களுக்கான 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் பஜ்ரங் புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா ஜப்பானைச் சேர்ந்த தைசி டகாடனியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேசியா ஆசியக் கிண்ணத்தில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.

இந்நிலையில், இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு 3 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அரியானா மாநிலத்தின் விளையாட்டு துறை மந்திரி டுவிட்டரில் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற புனியாவுக்கு வாழ்த்துக்கள். அரியானா மாநில அரசு சார்பில் பஜ்ரங் புனியாவுக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்க உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

மேலும், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *