இன்றைய ராசிபலன் 01-07-2019


இன்றைய ராசிபலன் 01-07-2019

மேஷம்

மேஷம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனு பவம் உண்டாகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். உற்சாகமான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத் தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. திட்ட மிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். உடல் நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். நிதானம் தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரைஇப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.

சிம்மம்

சிம்மம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந் தவர்களின் மனசு மாறும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கன்னி

கன்னி: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில்
புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள்.சாதிக்கும் நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும்.சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர் வீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனை விக்குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் ஆதரிப்பார்கள். நிம்மதி உண்டாகும் நாள்.

தனுசு

தனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். புதுவேலை அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோ கத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபா ரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனை கள் தருவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: நண்பர்கள் தேடி வருவார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். பயணங்கள் திருப்தி கரமாக அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

மீனம்

மீனம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பூர்வீக சொத்துபிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளு வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள் வார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

நன்றி-dinakaran

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *