இன்றைய ராசிபலன் 03-07-2019


இன்றைய ராசிபலன் 03-07-2019

மேஷம்

மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.

ரிஷபம்

ரிஷபம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கடகம்

கடகம்: கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உடல் அசதி,சோர்வு வந்து விலகும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரம் தழைக்கும். புது ஒப்பந்தம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத் துவம் தருவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

கன்னி

கன்னி: எதையும் தாங்கும் மனோபலம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

துலாம்

துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.

தனுசு

தனுசு: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங் குவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். மனைவி வழியில் அனுகூலம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மகரம்

மகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமா வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பொருகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொள்வீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

மீனம்

மீனம்: ழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

நன்றி-dinakaran



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *