இன்றைய ராசிபலன் 07-06-2019


இன்றைய ராசிபலன் 07-06-2019

தேதி 07-06-2019
இன்று
‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜூன் 7 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.

இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம்
நாள் வெள்ளிக்கிழமை
திதி சதுர்த்தி காலை 9.42 வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் பூசம் இரவு 9.05 வரை பிறகு ஆயில்யம்
யோகம் மரணயோகம்
ராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை
நல்லநேரம் காலை 9.30 முதல்10.30 வரை/ மாலை 4.30 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம் மூலம் இரவு 9.05 வரை பிறகு பூராடம்
சூலம் மேற்கு
பரிகாரம் வெல்லம்

மேஷம்

மேஷம்: அனுகூலமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், . தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும்.

தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு தாயின் தேவைகளை நிறைவேற்றி, அவருடைய ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும். அலுவல கத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்

ரிஷபம்: உற்சாகமான நாளாக அமையும். எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம்.

வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். தந்தை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மிதுனம்

மிதுனம்: இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும்.

அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும்.

கடகம்

கடகம்: மகிழ்ச்சியான நாள். தேவையான பணம் கையில் இருக்கும். இளைய சகோதரர் கேட்கும் உதவியைச் செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரியின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கை உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

சிம்மம்

சிம்மம்: மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனால், புதிய முயற்சி எதையும் இன்று தொடங்கவேண்டாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.

வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் செலவுகளும் அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் தேவையை நிறைவேற்றுவதற்காக செலவு செய்யவேண்டி வரும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

கன்னி

கன்னி: அரசாங்க அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். முக்கிய முடிவுகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது சாதகமாக முடியும்.

பிற்பகலுக்கு மேல் தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

துலாம்

துலாம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைப்பது மகிழ்ச்சி தரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்தினர் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும்.

விருச்சிகம்

விருச்சிகம்: வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.

சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை தேவை.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

தனுசு

தனுசு: புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்க்கும் செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.

மகரம்

மகரம்: எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக பயணம் மேற் கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.

வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

கும்பம்

கும்பம்: பிற்பகலுக்குமேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் பிற்பகலுக்குமேல் விறுவிறுப்பாக நடக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக் கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடைகளை வாங்கும் யோகம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மீனம்

மீனம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களையும், வெளியிடங்களில் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது.

உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும்.அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு ஏற்படும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் காணாமல் போய் தேடிய பொருள் கிடைக்கும்.

நன்றி – vikatan



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *