இன்றைய ராசிபலன் 18-07-2019


இன்றைய ராசிபலன் 18-07-2019

மேஷம்

மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய
ஆவணங்கள் கிடைக்கும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உதவி செய்வதாக வாகுக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சிம்மம்

சிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர் களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். கனவு நனவாகும் நாள்.

துலாம்

துலாம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தா பம் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். பயணங் களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத் தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

தனுசு

தனுசு: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மீனம்

மீனம்: உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *