கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்


எனக்கு தூ க் கு ப் போட கயிறு தாங்க.. 9 வயது சிறுவனின் கதறல்.. உலகை உலுக்குறது... நெஞ்சை உருகவைத்த காட்சி..!

உலக வாழ்வை வெறுப்பதற்கும், தற்கொலை எண்ணம் வருவதற்கும் வாழ்வில் பலகட்ட சோகங்கள் தான் காரணம். ஆனால் அதற்கு கொஞ்சம் வயதும் ஆகிவிடுகிறது. ஆனால் 9 வயதே ஆன சிறுவன் ஒருவன் தற்கொலை எண்ணத்துடன், கத்தி கேட்டு அழும் வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகிறது. மக்கள் இதனை சோகத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர்தான் தன் 9 வயதான மகன் குவார்டன் தற்கொலை எண்ணத்தோடு கதறி அழும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அதாவது அவரது மகன் குவார்டனுக்கு தலை கொஞ்சம் பெரிதாக இருக்கிறது. கை, கால்கள் வளர்ச்சி இல்லாமல் உள்ளது. இதனாலேயே தன்னை பள்ளியில் உள்ள அனைவரும் கேலி செய்து கொடுமைப்படுத்துவதாகச் சொல்லி அந்த சிறுவன் தன் தாயிடம் கதறி அழுகிறான். இது பார்ப்போரை உருகச் செய்கிறது.

மேலும் அந்த அழுகையின் ஊடே சிறுவன், எனக்கு ஒரு கத்தியை கொடுங்க. நானே என்னை கொலை செஞ்சுக்குறேன் என கதறுவது காண்போர் உள்ளத்தை உருகச் செய்கிறது. உலக அளவில் அதிகமானோர் அதை சோகத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.

 

 



One thought on “கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்

  1. வணக்கம் லண்டன் இணையத்தை இன்று நண்பர் கவிஞர் தீப செல்வன் அனுப்பியிருந்தார். அவுஸ்திரேலிய பையனின் பதிவு மனசை பிழக்கிறது. தயவு செய்து தமிழ் வடிவத்தை அச்சு அல்லது ஒலிவடிவத்தில் இணையுங்கள். இது எல்லா தமிழ் பெற்றோர்களையும் சென்றடைய வேண்டும். அரசியல் சமூக சேதிகள் கட்டுரைககள் என ஆதார பூர்வமான விடய பங்களிபுகளோடு பயணித்தால் வெற்றி பெறுவீர்கள். நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *