ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்படும் மலேசியர்கள்.


ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் மலேசியர்கள் பார்வையாளர் விசாவை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், வாரந்தோறும் சுமார் 20 மலேசியர்கள் ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

சமீப ஆண்டுகளாக, பார்வையாளர் விசாவில் செல்லும் மலேசியர்கள் நீண்ட காலம் ஆஸ்திரேலியாவில் தங்குவதற்காக பாதுகாப்பு விசாவுக்கு விண்ணப்பிக்கின்றனர்.

குடிவரவுத்துறை அதிகாரிகள் மலேசியர்களுக்கு இவ்விசாவை நிராகரித்தாலும், அம்முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து ஆஸ்திரேலியாவில் தங்குவதை மலேசியர்கள் நீட்டித்து கொள்வதாகக் கூறப்படுகின்றது.

அந்த காலத்தில், அவர்கள் தங்குவதற்கும் பணியாற்றுவதற்குமான வாய்ப்பை ஆஸ்திரேலிய சட்டம் வழங்குகின்றது.

2014-15 பொறுத்த வரை, பாதுகாப்பு விசா கோரி விண்ணப்பதவர்களின் எண்ணிக்கை 1,400 யாக இருந்துள்ளது. அதுவே, 2015-16ல் 3500 யாகவும் 2016-17ல் 8,600 யாகவும் இருந்துள்ளன. இது 2018ல் 9,300 என உயர்ந்துள்ளது.

வெளிநாட்டினரின் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை எதிர்கொள்ள கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 50 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

இப்படி விண்ணப்பக்கூடிய 90 சதவீதமானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விடுவதாகக் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *