அவுஸ்ரேலியாவில் இலங்கைப் பெண்ணொருவர் கொலை!


குயின்ஸ்லாந்தில் வசித்து வந்த 52 வயதான தேவகி என்ற இலங்கைப் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பின்னர் கணவரே பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக குயின்ஸ்லாந்து பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நன்றி-nadunadapu



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *