”லஷ்மன்ஸ்ருதி” இசைக்குழுவின் ஐயப்ப பக்தி இசைநிகழ்ச்சி


 

ஐயப்ப பக்தர்களுக்காக முழுக்க முழுக்க பக்திப் பாடல்கள் மட்டும் இடம்பெறும் பக்தி இசை நிகழ்ச்சி ஸ்ரீ பாக்யலஷ்மி டூர்ஸ் & ட்ராவல்ஸ் சார்பாக தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் வரும் நவம்பர் 28 ம் தேதி புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது. “லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழுவினர் வழங்கும் இந்நிகழ்ச்சி தொடர்ந்து 29 வது ஆண்டாக, ஐயப்ப பக்தர்களுக்காக இலவசமாக நடத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்களை மகிழ்விக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியில், பிரபல பாடகர்களும் இசைக் கலைஞர்களும் பங்கேற்று சிறப்பித்து வருகின்றனர். அரங்கில் வாழை அம்பலத்துடன் பதினெட்டுப்படி அதன்மேல் கம்பீரமாக ஐயப்பனை அமரவைத்து, சாஸ்திர சம்பிரதாய முறைப்படியான பூஜையுடன் வெகு விமரிசையாக நடத்தப்படுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து இந்நிகழ்ச்சியை பக்திப் பரவசத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

.

இந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் கலைமாமணி திரு கங்கை அமரன் அவர்கள் தலைமையில்

பக்தி இசையில் பிரபலமாக உள்ள பின்னணிப் பாடகர்கள் முகேஷ், மாலதி லஷ்மண், வேல்முருகன், ஸ்ரீலேகா பார்த்தசாரதி, செந்தில்தாஸ், ரோஷினி, மகாலிங்கம், ப்ரியா ஹேமேஷ், கர்நாடக இசைப்பாடகி சுசித்ரா, சூப்பர் சிங்கர் வெற்றியாளர்களான பின்னணிப் பாடகர்கள் திவாகர், ஆனந்த் அரவிந்தாக்‌ஷன், செந்தில் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு இசைமழை பொழிய உள்ளனர்.

அரங்க நுழை வாயிலில் வாழை அம்பலத்தில் சுவாமி ஐயப்பன் வீற்றிருக்கும் அலங்காரத்தை, ஸ்ரீ ராகவேந்திரா டிரேடர்ஸ் திரு. பரமசிவம் அவர்கள் தொடர்ந்து 29வது வருடமாக ஒவ்வொரு வருடமும் கைங்கர்யமாய் அளித்து வருகிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.

ஐயப்ப பக்தர்களுக்காக இந்த நிகழ்ச்சியை ஆண்டுதோறும் இலவசமாக நடத்துவதன் மூலமாக அளவில்லா ஆத்ம திருப்தி கிடைக்கிறது. இறைவன் அருளால் உலகம் முழுவதும் எங்களின் இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த முடிந்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’ என நெகிழ்கிறனர் லஷ்மன்ஸ்ருதி இசைக் குழுவினர்.

இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்பதனால் அனைவரும் திரளாக வருகை தந்து இந்த பக்தி இசைபூஜையில் கலந்து கொண்டு இறைவன் அருள் பெற அன்போடு வேண்டப்படுகிறது.

நிகழ்ச்சியைக் காண வரும் பக்தர்கள் அனைவருக்கும் இசை விருந்துடன், நந்தினி ஸ்வீட்ஸ் சார்பாக அனைத்து பக்தர்களுக்கும் இலவச பிரசாதம் வழங்கப்படும்.

அனைவரும் வருக !!!  ஐயப்பன் அருள் பெறுக !!!

”முழுக்க முழுக்க பக்திப் பாடல்கள் மட்டும் இடம்பெறும் பக்தி இசைபூஜை”

நவம்பர் 28, புதன் கிழமை, மாலை 6.00 மணி காமராஜர் அரங்கம் ஏ/சி, தேனாம்பேட்டை, சென்னை 18

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *