ஒரு வயதுவரை குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுக்காதீர்கள்!


ஒரு வயதுவரை குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுக்காதீர்கள்! – மருத்துவ குழு எச்சரிக்கை!

பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஒரு வருடத்துக்குள் பழச்சாறு கொடுக்கக் கூடாது என்று அமெரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2001-க்குப் பிறகு மாற்றி அமைக்கப்பட்டுள்ள பிறந்த குழந்தைகளுக்கான உணவு முறை குறித்த பட்டியலில் இந்த புதிய கட்டுப்பாடு சேர்க்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்புக்கு முன்பு வரை பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் வரை பழச்சாறு கொடுக்கக் கூடாது என்று சொல்லப்பட்டு இருந்தது.

அது தற்போது மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டு ஒரு வருடத்துக்குப் பிறந்த குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பழங்களை அப்படியே சாப்பிடுவதில் இருக்கும் நன்மை, அதனை சாறாகப் பிழிந்து குடிப்பதில் கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரு வருடத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுக்கப்படும் போது வளர்ந்த பிறகு அவர்களுக்கு பற்சிதைவு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், ஒரு வயது முதல் 12 வயது வரை அதிக அளவு பழங்களைக் குழந்தைகள் உண்ண வேண்டும். அப்போது கூட பழங்களைக் கடித்து உண்பதே மிகச் சிறந்தது என்றும் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

நன்றி – தீபக்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *