இளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் இலங்கை மகளிர் அணி முதல் வெற்றி!


இளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் எகிப்து அணிக்கு எதிரான கூடைப்பந்தாட்டப் போட்டியில் 17 – 15 எனும் புள்ளிகள் கணக்கில் இலங்கை மகளிர் அணி வெற்றியீட்டியது.

இளையோருக்கான ஒலிம்பிக் விழா வரலாற்றில் கூடைப்பந்தாட்டத்தில் இலங்கை அணி ஈட்டிய முதல் வெற்றி இதுவாகும்.

இளையோருக்கான ஒலிம்பிக் விழா ஆர்ஜென்டினாவின் புவனோஸ் ஐரிஸில் நடைபெற்று வருகின்றது.

இதில் மகளிருக்கான கூடைப்பந்தாட்டத்தில் இலங்கை B குழுவில் போட்டியிடுகின்றது.

இலங்கை மகளிர் கூடைப்பந்தாட்ட அணி அடுத்ததாக யுக்ரேன் மற்றும் வெனிசுவேலா ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *