மன அழுத்தத்தைப் போக்க வெந்நீரில் குளியல் போடுங்க!


மன அழுத்தத்தைப் போக்க வெந்நீரில் குளியல் போடுங்க!

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், எல்லா விசயங்களுமே மனித மனிம மனதை ஆக்கிரமித்து சித்திரவதை செய்கின்றன என்றே சொல்லலாம்.

இதன் காரணமாக பெருவாரியானவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றனர்.

இந்த மன உளைச்சலே நாளடைவில் மன அழுத்தத்தமாக மாறி, அவரின் உயிரை எடுத்து விடுகிறது இப்படி உயிரை விடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இதற்கு விதிவிலக்கு என்று சொல்ல முடியாத அளவுக்கு எல்லாத் துறைகளும் விளங்குகின்றன. ஆகையால்தான் இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி என்ற கோணத்தில் அண்மையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

இந்த ஆய்வின் முடிவில் மன அழுத்தத்துக்கு ஆளானவர்கள் குறிப்பிட்ட வெப்ப நிலையில் வெந்நீரில் குளிப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இது பேச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, மருந்துகள் எதுவுமே உட்கொள்ளாமல் மன அழுத்தத்தினை குறைப்பதற்கான எளிய வழி என்றும் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

எனவே, மன அழுத்தத்துக்கு ஆளானவர்கள் சிரமம் எதுவும் எடுக்காமல் இதுபோன்று வெந்நீரில் குளிக்களாமே!

நன்றி – கனகராஜ்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *