ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழத்திற்குள் சவுதி அரேபியர்கள்!


கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் நிர்வகிக்கப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

மோசடியான முறையில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு தொடர்பிலான நாடாளுமன்ற கண்காணிப்பு செயற்குழு தெரிவித்துள்ளது.

Batticaloa Campus நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கடன் ஒப்பந்தங்களின் உள்ளடக்கம் தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக, செயற்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணத்திற்காக சவுதி அரேபியர்கள் சிலருடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், குறித்த நிறுவனத்துக்காக வங்கி கடன் பெற்றுக்கொள்ளப்பட்டபோது இந்த விடயம் மறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் ‘Batticaloa Campus’ தனியார் நிறுவனத்துக்கு பணம் பெற்றுக்கொள்ளப்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்காக 5 அரச நிறுவனங்கள் நேற்று கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு தொடர்பிலான நாடாளுமன்ற கண்காணிப்பு செயற்குழுவின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தன.

இலங்கை வங்கி, இலங்கை மத்திய வங்கி, முதலீட்டு சபை, உயர்கல்வி அமைச்சு, மகாவலி அதிகாரசபை, நிறுவன பதிவாளர் திணைக்களம் மற்றும் பிரதேச செயலாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

நன்றி – tamilwinLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *