அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘பிகில்’ திரைப்படத்தின் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விஜய் பாடுகிறார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் முதல் பாடலான வெறித்தனம் என்ற பாடலை நடிகர் விஜய் பாடுகிறார்.
அந்த பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார் என்றும் அதனுடன் கூடிய ஒரு ஒளிப்படத்தைதையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இத்திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துவருகின்னறார்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் தீபாளவளிக்கு வெளியாகவுள்ள இந்த படத்தில் இதில் நடிகை நயன்தாரா, ஜாக்கி, கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்து வருகின்றனர்.
நன்றி-nakee