இவ்வளவு மருத்துவ பயனா தேங்காய்குள் ஒளித்திருக்கும் தேங்காய் பூவிற்குள்?


நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் இந்த தேங்காய் பூ ஆகும்.

தேங்காயிலும் தேங்காய் தண்ணீரிலும் இளநீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றதோ அதைவிட மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இந்த தேங்காய் பூவில் உண்டு என்று சொல்லப்படுகின்றது.

இது பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. தேங்காப்பூ சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

  • தேங்காய் பூவுக்குள் இருக்கின்ற அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களினால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காகக் கூட்டிவிடும்.
  • தேங்காய் பூவை சாப்பிட்டால் உடலுக்கு அதீத எனர்ஜி கிடைக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும்.
  • தேங்காய் பூவில் உள்ள மினரல்களும் வைட்டமின்களும் குடலுக்குப் பாதுகாப்பு அளித்து மலச்சிக்கலைப் போக்குகிறது. அஜீரணத்தை விரட்டியடிக்கிறது.
  • தேங்காய் பூவை சாப்பிடுவதனால் இரத்தத்தில் உள்ள அதிக அளவிலான சர்க்கரையைக் கட்டுப்படுத்த பெரிதும் இந்த தேங்காய் பூ பயன்படுகிறது.
  • கொழுப்பு தேங்கும் பிரச்சினையை சரிசெய்வதிலும் மிக சிறப்பாக தேங்காய் பூ செயல்படும்.
  • தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் இந்த தேங்காய் பூ சாப்பிட்டால் மிக வேகமாக குணமடைய ஆரம்பிக்கும்.
  • தேங்காய் பூ புற்றுநோய் செல்களைத் தூண்டுகின்ற ஃப்ரீ ரேடிக்கல்ஸைடலில் இருந்து வெளியேற்ற உதவி புரிகின்றது.
  • தேங்காய் பூ உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதினால் உடலில் கொழுப்புகள் தேங்காமல் உடல் எடையையும் வேகமாகக் குறைக்க உதவுகிறது.
  • சிறுநீரகத்தில் உருவாகிற நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் இந்த தேங்காய் பூவுக்கு உண்டு.
  • சருமத்தை மிக இளமையாகவும் பொலிவுடனும் சருமச் சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருப்பதில் மிக முக்கியப் பங்கு இந்த தேங்காய் பூவுக்கு உண்டு.

 

நன்றி : நெற்றிக்கண்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *