பிக்பாஸ் நிகழ்ச்சியில்!


கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் பட்டியல் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் கலந்து கொண்டு, 100 நாட்கள் ஒரே வீட்டில் வசிப்பார்கள்.

இறுதியில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு, பல லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும்.

இந்தியில் ஆரம்பித்த இந்நிகழ்ச்சி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மெல்ல, மெல்ல தீயாய் பற்றிக் கொண்டது.

மக்களின் மனதை எளிதாக வெல்ல இந்த நிகழ்ச்சி பிரபலங்களுக்கு ஒரு பாலமாக அமைகிறது.

இதன் காரணமாக திரையுலகில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நடிகர், நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி சீசன் 1, சீசன் 2, என்ற இரண்டு பாகமும் பெரிய வெற்றி பெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் வரும் 23-ந்தேதி ஞாயிறு தொடங்க இருக்கிறது.

சமீபத்தில் பிக்பாஸ்-3 சீசனுக்கான பணிகள் துவங்கி கமல் பங்குபெறும் புரோமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் 15 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டாலும் கூட அந்த பட்டியலை மிகவும் ரகசியமாக வைத்துள்ளார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் என்று ஒரு பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நடிகைகள் கஸ்தூரி, விசித்ரா, பூனம் பாஜ்வா, சாந்தினி, காமெடி நடிகை மதுமிதா, நடிகர்கள் மோகன் வைத்யா, சக்திசரண், ராதாரவி, பிரேம்ஜி, சந்தான பாரதி, ஸ்ரீமன், ரமேஷ் திலக், டப்மாஷ் மிருணாளினி, மாடல் ஸ்ரீகோபிகா, விஜே ரம்யா, பாடகர் கிரிஷ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக ஒரு பட்டியல் பரவுகிறது.

நன்றி -vijaytvLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *