ஒரே சிக்சரில் 19 ஆண்டு சாதனையை சமன் செய்த யார்க்கர் கிங் பும்ரா


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், கடைசி பந்தில் சிக்சர் அடித்த பும்ரா, சுமார் 19 ஆண்டு சாதனையை சமன் செய்தார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றார். முதல் மூன்று போட்டியின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி, மொஹாலியில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட்கோலி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்க வீரர்களான ரோகித் சர்மா (95), தவான் (143) ஆகியோர் கைகொடுக்க, இந்திய அணி, 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 358 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் இப்போட்டியில் கடைசி பந்தை எதிர்கொண்ட பும்ரா, அந்த பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இதன் மூலம் 11-வது வீரராக களமிறங்கி, கடைசிப் பந்தில் சிக்சர் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார்.

தவிர, சுமார் 19 ஆண்டு சாதனையை சமன் செய்தார் பும்ரா, முன்னதாக கடந்த 2000ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கடைசி பந்தில் சிக்சர் அடித்தார்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eight =