ரஜினி, கமல் உட்பட 340 நடிகர், நடிகைகள் மலேசியா பயணம் | நட்சத்திர கலைவிழா


தென் இந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக, நட்சத்திர கலைவிழா நடத்தப்படும் என்று நடிகர் சங்க பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மலேசியாவில் நட்சத்திர கலை விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்காக தென் இந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மலேசியா சென்றனர்.
இதையடுத்து மலேசியாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. நடிகர் சங்க தலைவர் நாசர், நிர்வாகிகள் கார்த்தி, கருணாஸ், பூச்சி முருகன், குட்டிபத்மினி, ரோகினி, பசுபதி, ரமணா, நந்தா, உதயா, ஹேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மலேசியாவில் ஜனவரி 6-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்தனர்.
மலேசியாவில் உள்ள புக்கிஜாலி அரங்கத்தில் நாளை மாலை இந்த கலை விழா பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் நடனம், நகைச்சுவை, நடிகர் – நடிகைகள் கலந்துரையாடல், சில தமிழ் படங்களின் பாடல் வெளியீட்டு விழா ஆகியவை இடம் பெறுகின்றன.

முன்னதாக 6 அணிகள் பங்குபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. விஷால், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம்ரவி, ஜீவா ஆகியோர் தலைமையில் இந்த அணிகள் மோதுகின்றன. இது 10 ஓவர் போட்டியாக நடக்கிறது. இது தவிர மலேசிய நடிகர்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டியும் நடைபெறுகிறது.
மலேசிய அரசின் உதவி, ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்த கலைவிழாவில் ரஜினி, கமல் மற்றும் நடிகர், நடிகைகள் திரைஉலக கலைஞர்கள் 340 பேர் பங்கேற்கிறார்கள். இதில் 200-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே மலேசியா சென்றுவிட்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − three =