விஜய்யின் திரையுலகப் பயணம் பற்றிய “விஜய் ஜெயித்த கதை” புத்தகம்


தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. விஜய் சினிமா உலகிற்கு அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறது. இந்நிலையில், விஜய் பற்றிய புத்தகம் ஒன்று ‘விஜய் ஜெயித்த கதை’ என்ற பெயரில் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.
இந்த புத்தகத்தை எழுத்தாளர் சபீதா ஜோசப் என்பவரால் எழுதப்பட்டு, அனைவராலும் இப்புத்தகம் வாங்கி படிக்கப்பட்டு வருகிறது. தற்போது நாளை நமதே எனும் புத்தகக் கண்காட்சி நெல்லையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் சரித்திரம் படைத்த தலைவர்களின் புத்தகத்திற்கு மத்தியில் விஜய்யின் திரையுலகப் பயணம் பற்றிய “விஜய் ஜெயித்த கதை” புத்தகம்  வைக்கப்பட்டிருந்தது.

இந்த புத்தகத்தில் விஜய்யின் 25 ஆண்டுகால திரையுலக பயணமான 1992-ல் வெளியான நாளைய தீர்ப்பு படத்திலிருந்து சமீபத்தில் வெளியான ‘மெர்சல்’ படம் வரை, அவர் கடந்து வந்த வெற்றி பயணத்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + thirteen =