நட்புக்கு உதவுவது தவறா? | டி.ராஜேந்தர் ஆதங்கம்


ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடித்துள்ள படம் ‘போக்கிரிராஜா’. இப்படத்தை பி.டி.எஸ். பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளார். ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார்.

டி.இமான் இசையில் இப்படத்தின் ‘அத்துவுட்டா’  என்கிற சிங்கிள் ட்ராக் பாடல் பிரசாத் லேப் திரையரங்கில் நேற்று வெளியிடப்பட்டது. .பாடலை  இயக்குநர் டி.ராஜேந்தர் வெளியிட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பெற்றுக் கொண்டார்.

பாடலை  வெளியிட்டு விட்டு டி.ராஜேந்தர் பேசும் போது. நான் ‘புலி’ படத்தின் விழாவுக்குப் பிறகு சினிமா விழாக்களில் கலந்து கொள்வதில்லை. பேசுவதில்லை என்று இருந்தேன். எனக்கு ஒரு ஆதங்கம் இருந்தது. அந்த விழாவில் நான் புலியை அப்படி அடுக்கி வர்ணித்ததை பல லட்சம் பேர் பார்த்தார்கள். பாராட்டினார்கள். ஆனால் சில டிவிகளில் விமர்சித்தார்கள். அவர்கள் வேறு கண்ணோட்டத்தில் பார்த்தார்கள்.

புலி பற்றி அவ்வளவு நான் பேசக் காரணம் ஈழத்தமிழர்களின் ஆதரவாளன் நான். புலி ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் பேசிய பேச்சை பலரும் விமர்சித்ததால் மனஉளைச்சலுக்கு ஆளானேன். யாரைத்தான் கிண்டல் செய்யவில்லை? கடவுளையே கிண்டல் செய்யவில்லையா?. அப்படியிருக்கும்தான் நான் ஒன்றுமே இல்லை.

‘வாலு’ படத்துக்கு பிரச்சினை வந்தபோது உதவியது விஜய் மட்டும்தான். அவர் செல்வகுமாரை தூதராக அனுப்பி உதவினார். அப்போது உதவிய ஒரே இதயம் அவர் மட்டும் தான். ‘புலி’ படப்பிரச்சினையில் ‘உடுக்கை இழந்தவன் கைபோல’ நட்புக்காக உதவினேன்.

நட்புக்கு உதவுவது தவறா? ‘புலி’ வெளியீட்டுக்காக நான் போராடினேன். சண்டை போட்டேன். ‘புலி’ வெளிவர நான் உதவினேன் என்று செல்வகுமாரைவிட சிபு தமீன்ஸ் சொன்னதில் மகிழ்ச்சி. ஏனென்றால் சினிமாவில் நன்றி மறந்தவர்கள் அதிகம்.

நான் கதை, திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு, பாடல்கள், இசை, எடிட்டிங், டைரக்ஷன் எல்லாம் செய்தவன். இன்று ஒரு பீப் பாடலால் ஏகப்பட்ட பிரச்சினைகள். ஒரு தந்தையாக எல்லாவற்றையும் மீறி வந்து கொண்டிருக்கிறேன். இந்த சினிமாவில் நன்றி மறப்பவர்கள் அதிகம். அதனால்தான் இன்று கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நீங்களும் என்னை மாதிரி சினிமாவில்  இருந்து விடாதீர்கள், கஷ்டபடுவீர்கள் என்று பேசினார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *