இயக்குநர் சங்கருக்கு இளையராஜா நோட்டீஸ் | ஊருவிட்டு ஊரு வந்து பாடல் விவகாரம்


கரகாட்டக்காரன் படத்தில்  இடம்பெற்ற ஊருவிட்டு ஊரு வந்து பாடலைப் அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக இயக்குநர் ஷங்கருக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும் இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர் அனுப்பியுள்ள நோட்டீசில், “கப்பல் படத்தில் எனது கட்சிக்காரர் இளையராஜாவின் ஊரு விட்டு ஊரு வந்து பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளீர்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவின் இசை – பாடல்களை இனி அகி மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனை செய்யக் கூடாது என நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றுள்ள நிலையில், அந்த அகி மியூசிக்கிடமிருந்து இந்தப் பாடலைப் பெற்று பயன்படுத்தியிருப்பது நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும். ஊருவிட்டு ஊருவந்து பாடலின் காப்பிரைட் உரிமை இளையராஜாவுக்கு மட்டுமே சொந்தமானது.

எனவே இந்தப் பாடல் திரையிலும், ரேடியோ, டிவி, விளம்பரங்களிலும் இதுவரை பயன்படுத்தியதற்கான ராயல்டியை இளையராஜாவுக்கு வழங்க வேண்டும்.

தொடர்ந்து இந்தப் பாடலைப் பயன்படுத்துவதையும் நிறுத்தும் வகையில் படத்திலிருந்து அந்தக் காட்சியே தூக்கப்பட வேண்டும்.

தவறினால் எனது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் காப்பி ரைட் சட்டப்படி கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளைத் தொடர முடிவு செய்துள்ளார்,” என்று கூறப்பட்டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *