ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் இருவருமே அரசியலில் குதிக்க மாட்டார்கள் | விஜயகாந்த்

8 views

நடிகர் ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் இருவருமே அரசியலில் குதிக்க மாட்டார்கள் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜயகாந்த் இவ்வாறு கூறியுள்ளார்.

விஜயகாந்த் மேலும் கூறியுள்ளதாவது:

ஒரே நேரத்தில் அரசியல், நடிப்பு என இரட்டைக் குதிரைகளில் பயணிப்பது கடினம் என ரஜினிகாந்தே என்னிடம் முன்பு கூறியுள்ளார்.ரஜினிகாந்த் எப்போதும் அரசியல் பற்றி பேச மட்டும்தான் செய்வார் . அதைதான் அவர் சரியாகக் கடைபிடிப்பார். அவரால் 2 குதிரைகளில் பயணம் செய்ய முடியாது என்பதை நான் உணர்ந்துள்ளேன். கடந்த காலங்களில் ரஜினி எதை செய்தாரோ, அதைத்தான் இப்போதும் செய்வார்.

அதேநேரம், நான் தைரியமாக அரசியலில் குதித்த போது ரஜினி அதற்காக என்னைப் பாராட்டினார். ரஜினி நேரடியாக அரசியலுக்கு வருவதென்பது இனிமேல் நடக்காத காரியம் என்றுதான் நான் கருதுகிறேன்.

கமல்ஹாசனும் அரசியலுக்கு வர மாட்டார் என்றுதான் தெரிகிறது. லஞ்ச ஊழலுக்கு எதிராக கமல் கருத்துத் தெரிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்பது புரியவில்லை. தமிழக அரசில் ஊழல் மோசமான நிலையில் உள்ளது. தமிழகத்தில் அரசு நிர்வாகம் மோசமடைந்து வருகிறது. பதவியை காத்துக் கொள்வதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக உள்ளனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eight =