இந்திய திரை வரலாற்றிலேயே முதன் முறையாக பூனை ஒன்று ஹீரோவாக நடிக்கும் ‘மியாவ்’


இந்திய திரை வரலாற்றிலேயே முதன் முறையாக , பெர்சியன் வகை பூனை ஒன்று ஹீராவாக நடிக்கும் ‘மியாவ்’ என்றொரு  த்ரில்லர் படம் தயாராகி வருகிறது.

இது தொடர்பாக படத்தின் இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி கூறியதாவது:

இது ‘செல்ஃபி’ என்ற பெயர் கொண்ட ஒரு பூனையை பற்றிய கதையாகும்.  குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் இந்தப் பூனை எவ்வாறு நான்கு இளைஞர்களை பழிவாங்க முடிவெடுக்கிறது என்பது பற்றியும், அதன் பின்பு  அந்த இளைஞர்களுக்கும், பூனைக்கும் இடையே நடக்கும் போராட்டமே இந்த கதையின் மையப் புள்ளியாகும்.

நாம் நினைத்த அனைத்தையும் ஒரு பூனையைக் கொண்டு செய்ய வைக்க முடியாது என்பதை உணர்த்திருப்பதாக  கூறிய பழனிச்சாமி, அதனால் பெரும்பாலான காட்சிகளை ‘கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்’ முறையில் உருவாக்கியிருக்கிறோம் என்று தெரிவித்தார். கிட்டத்தட்ட 550 ஷாட்களில் ‘மாஸ்டர் கிளாஸ்’ கிராபிக் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.நிஜ பூனைக்கும், கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ள பூனைக்கும் இடையே எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாது.

இந்தப் படத்தை இளைஞர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸுக்கு ஏற்ற வகையிலான ‘காமெடி த்ரில்லர்’ என்று கூறிய அவர், இந்தப் படம் வளர்ப்பு பிராணிகளை வைத்திருப்போருக்கு சமர்ப்பணம் என்று தெரிவித்தார். இந்தப் படத்தை பார்த்த பிறகு பூனைகளின் மேல் ஒரு காதலே உண்டாகும் என்றும் அவர் தெரிவித்தார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *