முன்னாள் அதிபர் நாதன் இறுதி அஞ்சலியில் வைரமுத்துவின் பாடல் | சிங்கப்பூர்


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எஸ்.ஆர். நாதன், முதுமை காரணமாக அவரது 92-ஆம் வயதில் கடந்த 22-ஆம் தேதி காலமானார். சிங்கப்பூரின் 6-ஆவது அதிபராக, 1999-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை அவர் பதவி வகித்தார். நீண்ட காலம் சிங்கப்பூர் அதிபராகப் பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் எஸ்.ஆர். நாதன். அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்னர், நாற்பதாண்டு காலம் சிங்கப்பூர் அரசு அதிகாரியாகவும், அமெரிக்கா, மலேசியாவுக்கான தூதராகவும் பதவி வகித்தார்.

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி  எஸ்.ஆர்.நாதனின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. உலகத் தலைவர்கள் கூடியிருந்த அந்த நிகழ்வில் எஸ்.ஆர்.நாதனுக்குப் பிடித்த கவிஞர் வைரமுத்துவின் பாடலான தஞ்சாவூரு மண்ணு எடுத்து என்ற பாட்டு அரசு மரியாதையோடு ஒலிபரப்பப்பட்டது.

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஆர்.நாதன், தனக்கு எந்த ஊர் சொந்த ஊர் என்று தெரியாது – அதனால் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இதில் ஏதேனும் ஓர்  ஊர் என் சொந்த ஊராக இருக்குமோ என்று உணர்ச்சிவசப்படுவதாக வைரமுத்துவிடம் சொல்லியிருக்கிறார்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழக கலாசார நிலையத்தில்  நிகழ்ந்த இறுதி அஞ்சலியில் அவருக்குப் பிடித்த இந்தப் பாட்டு ஒலிபரப்பப்பட்ட போது சிங்கப்பூர்த் தமிழர்கள் சிலிர்த்து நின்றார்கள். வைரமுத்து தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *